Maalaimalar
ஆவின் பொருட்கள் விலை உயர்வு: எரியும் விலைவாசி உயர்வுத் தீயில் அரசு மேலும் எண்ணெய் ஊற்றுவதா?- அன்புமணி கேள்வி
தமிழகத்தின் ஏழை மற்றும் நடுத்தர மக்களை விலைவாசி மிகக் கடுமையாக பாதித்திருக்கிறது. கொழுந்து விட்டெரியும் அந்தத் தீயை அவிப்பது தான் தமிழக அரசின் முதன்மைக் கடமையாக இருக்க வேண்டும். அதற்கு மாறாக தமிழக அரசும் அதன் பங்குக்கு ஆவின் பால் பொருள்களின் விலைகளை உயர்த்துவது எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவதாகத் தான் அமையும். எனவே, வெண்ணெய், நெய் உள்ளிட்ட பால் பொருள்களின் விலை உயர்வை திரும்பப் பெறுமாறு ஆவின் நிறுவனத்திற்கு அரசு ஆணையிட வேண்டும்…