உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

“காவல்துறை என்பது ஆளும் கட்சிக்கு மட்டுமே சேவை செய்யும் அமைப்பாக இருக்கக் கூடாது” - நீதிபதி பரபரப்பு கருத்து!

சென்னையில் நடைபெற்ற திமுக மகளிர் அணி கூட்டத்தில், முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகக் கருத்துத் தெரிவித்ததாகக் கூறி, திமுக கவுன்சிலர் சுதாவுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதி என். ரமேஷ், திமுக கவுன்சிலர் சுதாவுக்கு முன்ஜாமின் வழங்கி பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அதில், “தினசரி சமூக ஊடகங்களில் சித்தாந்த ரீதியான அரசியல் கருத்துகளையும், தனிப்பட்ட முறையில் அரசியல் எதிரிகளை வசைபாடும் கருத்துகளையும் பலர் வெளியிட்டு வருகின்றனர். இது தொடர்பாக அனைத்துத் த…