Indian Express Tamil
'வேலையை குறைக்காதீர்கள், தூக்கத்தை குறையுங்கள்': 8 மணி நேரத்தில் அயர்ன்மேன் ரேஸை முடித்த 57 வயது கேரள நீதிபதி
எழுதியவர்: பவ்னீத் சிங் சத்தா ஞாயிற்றுக்கிழமை அன்று கோவாவில் நடைபெற்ற 'அயர்ன்மேன் 70.3' (Ironman 70.3) பந்தயத்தின் எல்லைக்கோட்டை கடந்த கேரளா உயர் நீதிமன்ற நீதிபதி பெச்சு குரியன் தாமஸ், "உங்கள் இலக்கை அடைய விரும்பினால், வலியோடு போராடாமல், அதை ஏற்றுக்கொண்டு கடந்து செல்ல வேண்டும்” என்ற வார்த்தைகளை நினைவு கூர்ந்தார். 57 வயதான நீதிபதி தாமஸ், 55 -59 வயது பிரிவில் போட்டியிட்டு, 8 மணி நேரம் 46 நிமிடங்கள் 44 வினாடிகளில் இந்த ஓட்டத்தை நிறைவு செய்தார். ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்க 'அயர்ன்மேன் 70.3 கோவா' என்பது 1.9 கி.மீ நீச்சல், 90 கி.மீ மிதிவண்டிப் பயணம் மற்றும் 21.1 கி.மீ ஓட்டம் ஆகியவற்றை உள்ளடக்க…