Indian Express Tamil
தீபாவளி விளக்கு அணையாமல் இருக்க ஒரு சூப்பர் ஐடியா... ஆனால் இதை மட்டும் செய்யாதீங்க
தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள் எனப் பல கொண்டாட்டங்கள் இருந்தாலும், வீட்டின் வாசலில் வரிசையாக ஏற்றி வைக்கப்படும் அகல் விளக்குகளுக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. தீபங்களின் திருநாளான தீபாவளியன்று வீடு முழுவதும் விளக்குகள் ஏற்றி அலங்கரிப்பதைப் பலரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். சிலர் தீபாவளி அன்று மட்டுமல்லாமல், அதற்கு முன்பும் பின்பும் தொடர்ந்து 5 அல்லது 11 நாட்கள் வீட்டு வாசலில் அகல் விளக்குகளை ஏற்றி வைப்பார்கள். இதற்காகவே பழைய அகல் விளக்குகளைப் பரணில் இருந்து எடுத்து சுத்தம் செய்வது, புதிய விளக்குகள் வாங்குவது, திரிகள் தயாராக வைத்திருப்பது எனப் பலரும் பண்டிகைக்கான வேலை…