Hindu Tamil Thisai
‘முரசு’ தீவிர புயலின் தாக்கத்தால் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை, திருவள்ளூரில் தயார் நிலையில் 6 மீட்புக் குழுக்கள்
சென்னை: ‘முரசு’ தீவிர புயலின் தாக்கத்தால் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் 6 பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. வங்கக்கடலில் உருவான ‘முரசு’ புயல் நேற்று காலை தீவிர புயலாக வலுப்பெற்றது. இதன் காரணமாக, வட தமிழகத்தில் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு…