Indian Express Tamil
CM Vjay Erode Updates: பெருந்துறையில் ரூ3000 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கிய விஜய்; சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த செங்கோட்டையன்
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு தொழில் தொடங்குவதற்காக வங்கிக்கடன் வழங்கும் அரசு விழா இன்று (நவம்பர் 3) நடைபெற்றது. பெருந்துறை 4 வழிச்சாலை காஞ்சிக்கோவில் ரோட்டில் உள்ள ஸ்ரீலட்சுமி நாராயணா மகாலில் நடை பெறும் இந்த விழாவில் விஜய் கலந்து கொண்டு மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்களுக்கு வங்கிக்கடன் மற்றும் ரூ.1,110 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். முன்னதாக இன்று சென்னையில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட முதலமைச்சர் விஜய், கோவை விமான நிலையத்துக்கு வந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் ஈரோடு வந்தார். முதல்வர் வருகையின்போதும், பெருந்துறையில் நிகழ்ச்சியை முடி…