Nakkheeran
நேற்று புதுக்கோட்டை., இன்று ஈரோடு; முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு
புதுக்கோட்டையில் ரூ.23 கோடியே 25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் திறந்து வைப்பதற்காகவும், அரசு சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காகவும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நேற்று (02-11-26) புதுக்கோட்டைக்குச் சென்றார். அங்கு சென்ற அவர், பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு ரூ.100 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிலையில், ஈரோடு மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு தொழில் தொடங்குவதற்கான வங்கிக் கடனை முதல்வர் விஜய் இன்று (03-11-26) வழங்கவுள்ளார். முன்னதாக இன்று காலை சென்னையில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு சென்ற முதல்வர் விஜய்க்கு…