Indian Express Tamil
பயணிகள் வசதிக்காக 'மெட்ரோ கனெக்ட்' திட்டம்; பயணத்தை மேம்படுத்த சென்னை மெட்ரோ புது யோசனை
சென்னை போரூரில் உள்ள ஒன் பேரமவுண்ட் கார்ப்பரேட் வளாகத்தை போரூர் பைபாஸ் மெட்ரோ நிலையத்துடன் இணைக்கும் ‘மெட்ரோ கனெக்ட்’ திட்டத்தின் 2-ம் கட்ட பணிகள் நேற்று (நவம்பர் 2) தொடங்கி வைத்துள்ளது. இந்தியாவில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தி வரும் முக்கிய போக்குவரத்து சாதனங்களில் ஒன்றாக ரயில்வே சேவை இருந்து வருகிறது. தற்போது அதற்கு இணையாக மெட்ரோ ரயில் திட்டம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. சென்னையில் சில இடங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில், பல இடங்களில் மெட்ரோ ரயில் பயணம்’ தொடங்குவதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வரிசையில் தற்போது போரூரில் உள்ள ஒன் பேரமவுண…