Polimer News
மழைநீர் சேமிப்பு அமைப்பு எப்படி இருக்க வேண்டும்? - புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு
1,000 சதுர அடி பரப்பளவு கொண்ட மொட்டை மாடியில் இருந்து ஆண்டுக்கு சராசரியாக கிடைக்கும் 97,000 லிட்டர் மழைநீரில் சுமார் 70 சதவீத நீரை மழைநீர் சேமிப்புக் கட்டமைப்பு மூலம் சேமிக்க முடியும் என கூறியுள்ள தமிழ்நாடு அரசு அதற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. மொட்டை மாடியில் இருந்து நீரை வடியச் செய்து மணல் மற்றும் கூழாங்கற்கள் அடங்கிய தொட்டியில் இறக்கி, கிணறு அல்லது போர்வெல் மூலம் சேமிக்க அரசு அறிவுறுத்தி உள்ளது. மழைநீரை உறிஞ்சும் கட்டமைப்புக்கான அளவுகோலையும் அரசு வெளியிட்டுள்ளது. ஒரு மீட்டர் அகலம், ஒரு மீட்டர் உயரத்துடன் கூடிய தொட்டியில் மேலடுக்கில் அளவில் பெரிய மணல், 2வது அடுக்கில் அளவில் சி…