IBC Tamil
இராணுவ நடவடிக்கையோ போரோ அல்ல:அமெரிக்கா செய்தது போர்க்குற்றம்:ஈரானின் நீதித்துறை அமைச்சர் காட்டம்
ஈரானின் மினாப் மற்றும் லமெர்ட் நகரங்கள் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்கதல்கள் போர்க்குற்றங்கள் ஆகும் என ஈரானிய நீதித்துறை அமைச்சர் அமின் ஹொசைன் ரஹிமி தெரிவித்துள்ளார். "சர்வதேச சட்டத்தின் கீழ், பெண்கள், குழந்தைகள் மற்றும் மருத்துவமனைகளைக் குறிவைக்க அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை," என்று ரஹிமி கூறியதாக ஈரானிய செய்தி நிறுவனமொன்று தெரிவித்துள்ளது. இத்தகைய தாக்குதல்கள் "சட்டபூர்வமான இராணுவ நடவடிக்கை அல்லது போர் ஆகாது" என்று ரஹிமி மேலும் தெரிவித்துள்ளார்.