Nakkheeran
“நம்பி ஏமாற வேண்டாம்” - ரித்திகா சிங் எச்சரிக்கை!
பிரபல நடிகை ரித்திகா சிங் கடைசியாக ‘வேட்டையன்’ படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து எந்த படத்திலும் அவர் நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த நிலையில் தனது பெயரில் போலி ஃபேஸ்புக் பக்கம் இருப்பதாக ரசிகர்களிடம் தெளிவுபடுத்தியுள்ளார். இது தொடர்பாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “என்னுடைய ஒரே ஒரு அதிகாரப்பூர்வ கணக்கு இதுதான். இதில் தான் அனைத்து விஷயங்களையும் நான் நேரடியாக பகிர்வேன். ஆனால், ஃபேஸ்புக்கில் எனது பெயரில் ஒரு பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அதில் மாதம் ரூ.400 கட்டணத்தில் சப்ஸ்கிரிப்ஷன் முறையும் இருக்கிறது. மக்களும் அதற்காகப் ப…