உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

விஜய் அறிவித்தபடி பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.44 கொள்முதல் விலை கிடைக்கவில்லை ஏன்? நிலவரம் என்ன?

அதிகாலை 3 மணிக்கே எழுந்து மாடுகளைப் பராமரித்து, மக்களுக்கும் குழந்தைகளுக்கும் பால் உற்பத்தி செய்து வழங்கும் பால்காரர்களின் வாழ்வாதாரம் இன்றைக்குப் பெரும் கேள்விக் குறியாக மாறியுள்ளது. பசுந்தீவனம், உலர் தீவனம், தவிடு மற்றும் புண்ணாக்கு உள்ளிட்ட இடுபொருட்களின் விலை மளமளவென உயர்ந்ததைத் தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்த்தி அறிவித்தார். இருப்பினும், தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பெரும்பாலான தொடக்கக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களுக்கு இந்த ரூ.44 முழுமையாகக் கிடைப்பதில்லை என்ற வேதனைக்குரல் ஒலித்துக் கொ…