உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

நேருக்கு நேராக மோதிக் கொண்ட ஹெலிகாப்டர்கள்; சென்னையைச் சேர்ந்தவருக்கு நேர்ந்த சோகம்!

நேபாளத்தில் எவரெஸ்ட் அடிவாரப் பகுதியில் இரண்டு ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவிலிருந்து சுமார் 250 கி.மீ. தொலைவில் உள்ள சோலுகும்பு மாவட்டத்தின் கும்பு பாசாங் லாமு கிராமத்தில் அமைந்துள்ள பெரிச்சே ஹெலிபேடில் இந்த விபத்து நிகழ்ந்தது. பெரிச்சே பகுதி, மவுண்ட் எவரெஸ்ட் பேஸ் கேம்ப் செல்லும் வழியில் அமைந்துள்ளது. இன்று (03-11-26) காலை சுமார் 8.11 மணிக்கு நடந்த இந்த விபத்து பார்போரை பதைபதைக்க வைக்கிறது. ‘பிஷ்டெயில் ஏர்’ மற்றும் ‘ஏர் டைனாஸ்டி’ ஆகிய இரு தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான சிறிய ரக ஹெலிகாப்டர்கள…