Indian Express Tamil
சட்டவிரோதமாக இயங்கும் 87 ரிசார்ட்டுகள்: உடனே மூட ஐகோர்ட் உத்தரவு
சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் அனுமதியில்லாத 87 ரிசார்ட்டுகளை உடனே மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூடிய பிறகு அடுத்தகட்டமாக கட்டடங்களை இடிக்கவும், எடுத்த நடவடிக்கை குறித்து நவம்பர் 27 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில், தேசிய வன விலங்குகள் வாரியம், மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் செயல்படும் சட்ட விரோத ரிசார்ட்கள் காரணமாக, மலைப்பகுதி சுற்றுச்சூழல் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, கோவையைச் சேர்ந்த ஒலி விழிப்புணர்வு இயக்கத்தின் நிறுவனர் கற…