உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

அசுர வேகத்தால் நேர்ந்த பயங்கரம்.. ஒரு நொடியில் அடுத்தடுத்து கவிழ்ந்த லாரி.. பதறவைக்கும் காட்சி..

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் திரும்புவதற்காக சாலையின் குறுக்கே நின்ற அரசுப் பேருந்து மீது மோதாமல் தவிர்க்க, எதிர்திசையில் வேகமாக வந்த பெட்ரோல் டேங்கரை அதன் ஓட்டுநர் திருப்பியபோது, எதிர்ச்சாலையில் வந்த கான்கிரீட் மிக்சிங் லாரி மற்றும் பார்சல் லாரி மீது மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில், மூன்று லாரிகளின் ஓட்டுநர்களும் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். பெட்ரோல் டேங்கரின் கிளீனர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.