Indian Express Tamil
திருச்சியில் ஒரே இரவில் 7 கடைகளுக்கு குறி; பூட்டை உடைத்து பணத்தை அள்ளிய மர்ம கும்பல்
திருச்சி கே.கே.நகர் பகுதியில் ஒரே இரவில் அடுத்தடுத்து 7 கடைகளின் பூட்டுகளை உடைத்து மர்ம கும்பல் பணம் மற்றும் பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் வியாபாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடர் கொள்ளை சம்பவங்கள் குறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி கே.கே.நகர் எல்ஐசி காலனி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன். இவர் அப்பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் நேற்று இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு கடையைப் பூட்டிச் சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்து கடையின் ப…