Nakkheeran
’மாமூலைப் பிரிப்பதில் தகராறு’; மல்லுக்கட்டிய காவலர்களை போட்டுக்கொடுத்த கடைக்காரர்
பொது மக்கள் முன்னிலையிலேயே, இரு காவலர்கள் மாமூல் பணத்தைப் பிரித்துக்கொள்ளும் போது ஏற்பட்ட தகராறில் அடித்துக்கொண்ட காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி நகரப் பகுதியில் பிரபல துணிக்கடை ஒன்று உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அந்த கடையில் மாமூல் வாங்கக் காவலர்கள் சென்றனர். அதாவது, பெரியக்கடை காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர் ஒருவரும், போக்குவரத்து காவல்துறையைச் சேர்ந்த காவலர் ஒருவரும் சென்றனர். அப்போது, மாமூல் பணத்தை யார்... யார்... எவ்வளவு? என பிரித்துக்கொள்வதில் அவர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் எல்லை மீறி, கடையின் உள்ளேயே பொதுமக்களுக்கு மத்தியில…