Indian Express Tamil
QS ஆசியா 2027 தரவரிசை; சென்னை ஐ.ஐ.டி உட்பட 71% இந்தியப் பல்கலைக் கழகங்கள் சரிவு; காரணம் என்ன?
'QS உலக பல்கலைக்கழக தரவரிசை - ஆசியா 2027' பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியப் பல்கலைக்கழகங்களில் பத்தில் ஏழு பல்கலைக்கழகங்களின் தரவரிசை சரிந்துள்ளது. அதே வேளையில், இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய நிறுவனங்களின் எண்ணிக்கை 325 ஆக உயர்ந்துள்ளது; இது சீனாவிற்கு அடுத்தபடியாக ஆசியப் பிராந்தியத்தில் இரண்டாவது அதிக எண்ணிக்கையாகும். QS அமைப்பின் தரவுகளின்படி, தரவரிசைப்படுத்தப்பட்ட இந்தியப் பல்கலைக்கழகங்களில் 71 சதவீதப் பல்கலைக்கழகங்கள் சரிவைச் சந்தித்துள்ளன, 18 சதவீதப் பல்கலைக்கழகங்கள் முன்னேறியுள்ளன, மேலும் 11 சதவீதப் பல்கலைக்கழகங்களின் நிலை மாறாமல் உள்ளது. இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிள…