Nakkheeran
“தமிழகத்தில் வாக்குச்சாவடிகள் அதிகரிப்பு” - அர்ச்சனா பட்நாயக் தகவல்!
தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 01.01.2027-ஐ தகுதிபெறும் நாளாகக் கொண்டு சிறப்பு சுருக்கமுறைத் திருத்த நடவடிக்கைகள் 15.10.2026 முதல் 04.01.2027 வரை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டில் வாக்குச்சாவடிகளை மறுசீரமைத்தல் மற்றும் பிரிவுகளை உருவாக்குதல் ஆகிய பணிகள் நடைபெற்றுள்ளன. இது தொடர்பாக, 234 வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் 38 மாவட்டத் தேர்தல் அதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கூட்டங்களை நடத்தி, அவர்களின் பரிந்துரைகள் மற்றும் கோரிக்கைகளைப் பரிசீலித்த பிறகு, வாக்குச்சாவடிகளின் பட்டியலைத் தயாரித்துள்ளனர். அதன்படி வாக்காளர்கள் எண்ணிக்க…