உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

ஆறு நுரைக்க ஷாம்புதான் காரணம்! -அமைச்சர் பேச்சின் ரகசியம்!

தென்னிந்திய மாநிலங்களில் பருவமழை தொடங்கி பெய்துவருகிறது. தமிழ்நாட்டில் பாயும் காவிரி, தென் பெண்ணை, நெய்யலாறு, பாலாற்றில் மழைத் தண்ணீர் பாய்ந்தோடும்போது, ஆறுகளில் வெண்நுரை மிதந்துபோவது பொதுமக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதுகுறித்து சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைமாற்றம் துறை அமைச்சர் ராஜீவ் செய்தியாளர்களிடம், "மனிதர்கள் குளிக்கும்போது பயன்படுத்தப்படும் சோப், ஷாம்பு போன்றவவை நுரையைத் தரும். அந்த தண்ணீர் ஆற்றில் கலப்பதால் நுரை வருகின்றது'' எனச் சொல்லி அதிர்ச்சியைத் தந்துள்ளார். தமிழ்நாட்டின் மத்திய மாவட்டங்கள் முதல் டெல்டா வரை காவேரியாற்று நீரையும், வட மாவட்டங்களில் தென்பெண்ணையாற்று நீரையும்…