Nakkheeran
கே.பி.யின் கலைப்பயணம்! -புஷ்பா கந்தசுவாமி (34)
இயக்குனருக்கு சிலை வைத்த பாடலாசிரியர்! அப்பாவுடைய புத்தக அலமாரியில் இருவர் ஆட்சிபுரிந்தார்கள். ஒருவர் முண்டாசுக்கவி பாரதி. அவருடைய கவிதைகள், கட்டுரைகள், அவரைப் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகள். மற்றொருவர் கவிப்பேரரசு வைரமுத்து. அவருடைய ஆரம்ப காலக் கவிதைகள் தொடங்கி, அவர் எழுதிய எண்ணற்ற கவிதைகள், புதினங்கள், இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள் எல்லாம் அப்பாவிடம் இருந்தன. அவர்களுக்குள் பூத்த நட்புக்கு விதை போட்டவர் கமல்ஹாசன். வைரமுத்துவின் "திருத்தி எழுதிய தீர்ப்புகள்' புத்தகத்தை படப்பிடிப்பு இடைவேளையில் கமல் சிலாகித்துப் பேச, பாரதியாரைப் பற்றிய படம் தயாரிக்க அப்பா, வைரமுத்துவை சந்திக்க அழைக்கிறார். அன்று ப…