உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

த.வெ.க.வில் குஸ்தி!

தமிழக வெற்றிக் கழகத்தில் கோஷ்டிச் சண்டைகள் வளரத் தொடங்கியிருப்பது அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை வருத்தமடையச் செய்துள்ளது. குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் கோஷ்டிச்சண்டை பேனர்களை கிழிக்குமளவுக்கு பெரிதாகியிருக்கிறது. சேலம் மாவட்டத்தில், ஆளுங்கட்சி வடமேற்கு மா.செ.யின் பிறந்த நாள் விழா பிளெக்ஸ் பேனர்களை, போக்கு வரத்துத்துறை அமைச்சரின் ஆதர வாளர்கள் இரவோடு இரவாக கிழித்து எறிந்ததால், த.வெ.க.வில் கோஷ்டி மோதல் அபாயம் ஏற்பட்டுள்ளது. சங்ககிரி, ஓமலூர் சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய சேலம் வடமேற்கு மாவட்ட த.வெ.க. செயலாளராக இருப்பவர் செந்தில்குமார். ஜவுளி தொழிலதிபர். அக்டோபர் 27ஆம் தேதி இவருடைய ப…