உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

கோவில் நிலம்! சர்ச்சையில் ரமணாஸ்ரமம்?

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் செங்கம் சாலையில் பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரே அமைந்துள்ளது தட்சணாமூர்த்தி கோவில். இந்த கோவில் புனரமைப்பு பணிகள் ஓராண்டுக்கும் மேலாக நடந்துவருகின்றன. தற்போது நவம்பர் 15ஆம் தேதி குடமுழுக்கு நடக்கும் என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதனை எதிர்த்து ஒரு தரப்பு உயர்நீதிமன்றம் சென்றுள்ளது பரபரப்பாகியுள்ளது. கோவில் புனரமைப்புப் பணியை செய்யும் கர்நாடகா மாநிலம் பெங்க ளுரூவைச் சேர்ந்த சுனிதா திம்ம கௌடா நம்மிடம், "நான் ரமண ஜெயந்தியன்று ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் செய்வதைப் பார்த்துவிட்டு 3 பெண்கள், என்னிடம் "தட்சணா மூர்த்தி கோ…