Nakkheeran
கணவரை கொன்ற த.வெ.க. பெண் நிர்வாகி!
நாகர்கோவிலில், செல்போன் சார்ஜர் வயர் மூலம் கணவரின் கழுத்தை நெரித்து கொலை செய்த த.வெ.க. மகளிரணி பெண் நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். நாகர்கோவில் அருகே இறச்சகுளம் பூங்கா நகரை சேர்ந்த பிரபல ரவுடி சுரேஷ் மீது 4 கொலை வழக்குகள் உட்பட பல வழக்குகள் உள்ளன. கடந்த 2012-ல் அ.தி.மு.க. ஆட்சியின்போது வனத்துறை ஊழியரான ஆறுமுகம்-யோகேஸ்வரி தம்பதியினரை துப்பாக்கியால் சுட்டு கொலைசெய்த சம்பவத்தில் சுரேஷ் 3வது குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது வனத்துறை மந்திரியாக இருந்த பச்சைமால், தற்போது த.வெ.க. துணை பொதுச்செயலாளராக இருக்கிறார். கந்துவட்டி தொழில் செய்துவந்த ரவுடி சுரேஷ் 15 ஆண்டுகளுக்குமுன் பாரதியை காத…