IBC Tamil
மக்களின் உணர்வுகளை அவமதித்த சந்திரசேகர் எம்.பியின் உரை: எழுந்துள்ள குற்றச்சாட்டு
மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் நிலப் பிரச்சினைக்குத் தீர்வு கோரியும், நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியும் கடந்த நவம்பர் 2ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்பாக, அமைச்சர் சந்திரசேகரன் நாடாளுமன்றத்தில் வெளியிட்ட கருத்துக்களுக்கு கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை (03.11.2026) நாடாளுமன்றத்தில் அமைச்சர் வெளியிட்ட கருத்துக்கள், போராட்டத்தை ஏற்பாடு செய்த சிவில் சமூக அமைப...