Nakkheeran
“சீமான் ஒரு பிழைப்புவாதி, திராவிடத்திடம் மண்டியிட்டு கிடக்கிறார்” - அமைச்சர் வன்னி அரசு ஆவேசம்!
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (03-11-26) சமூக நீதித்துறை சார்பில் வண்டியூர் தீர்த்தக்காடு பகுதி மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு பங்கேற்று பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் வன்னி அரசு, “தமிழ்நாட்டில் நல்லாட்சி நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு தீர்த்தக்காடு பகுதி மக்களுக்கு பட்டா வழங்கியதே சாட்சி தான். அடித்தட்டு மக்களுக்கான பிரச்சனைகளை கண்டறிந்து செயல்பட்டிருக்கிறோம். நாங்கள் மக்களுக்கான நலத்திட்டங்களை நோக்கி சென்று கொண்டிருக…