Nakkheeran
’சில்லறை விவகாரத்தால் சிறைக்கு சென்ற பெண்’; கனநேர ஆத்திரத்தால் நொடிப்பொழுதில் விபரீதம்
சில்லறை விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் பயணி ஒருவரின் ஆத்திர செயலால், பேருந்து நடத்துநர் உயிர் இழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம், பத்ரிநாத் கோத்தகுடம் மாவட்டத்தின் மணுகூரு பணி மனைக்குச் சொந்தமான அரசு பேருந்து ஒன்று, கடந்த மாதம் 25 ஆம் தேதியன்று பத்ராசலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது, தனது மகனுடன் பேருந்தில் ஏறிய மவுனிகா, தனது மகனுக்கான பயணச்சீட்டிற்காக ரூ.100 பணத்தைக் கொடுத்து, ரூ.10 க்கான டிக்கெட்டை பெற்றுக்கொண்டார். மீதி சில்லறை இல்லாத காரணத்தினால், நடத்துநர் குண்ட்லா பிரவலிகா (24) இறங்கும்போது மீதி சில்லறையைப் பெற்றுக்கொள்ளுமாறு சீட்டின் பின…