Hindu Tamil Thisai
மடப்புரம் அஜித் குமார் வழக்கை 9 மாதத்தில் முடிக்க வேண்டும்: விசாரணை நீதிமன்றத்துக்கு ஐகோர்ட் உத்தரவு
மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் காவல் மரணம் வழக்கை 9 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என விசாரணை நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாக பணியாற்றிய அஜித்குமார், நகைத் திருட்டு தொடர்பான புகாரில் தனிப்படை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில் உயிரிழந்தார். சிபிஐ வழக்கை விசாரித்து 6 தனிப்படை காவலர்களை கைது செய்தது. மானாமதுரை காவல் துணைக்…