Nakkheeran
நெகிழிக்கு முற்றுப்புள்ளி வைக்க வந்த ‘மஞ்சள் பை’ திட்டம் கைவிடப்பட்டதா?
தமிழகத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை ஒழித்து, மீண்டும் பாரம்பரிய முறையிலான பயன்பாட்டை மீட்டெடுக்கும் உயரிய நோக்கத்துடன் தமிழக அரசால் தொடங்கப்பட்ட ஒரு பிரம்மாண்ட முயற்சிதான் ‘மீண்டும் மஞ்சள் பை’ இயக்கம். ஆனால், தொடங்கப்பட்ட வேகத்திலேயே இந்தத் திட்டம் தற்பொழுது செயலிழந்து காணப்படுகிறதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது. டிசம்பர் 23, 2021 அன்று முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் ‘மீண்டும் மஞ்சள் பை’ திட்டம் மிக விமரிசையாகத் தொடங்கி வைக்கப்பட்டது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்பை (Single-use Plastic) பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, நமது பண்பாட்டோடு இணைந்த துணிப்பையைத் திர…