Thanthi TV
பொன்னேரி அருகே தாழ்வாகச் சென்ற மின் கம்பியில் சிக்கி மான், பசுக்கள் பலி
திருவள்ளூர் மாவட்டம் அனுப்பம்பட்டு பகுதியில் தாழ்வாகச் சென்ற மின்சாரக் கம்பியில் சிக்கி புள்ளிமான் ஒன்றும், இரண்டு பசுக்களும் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தன. பசுக்களை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்ற உரிமையாளர் அனிதா என்பவர் சற்றுப் பின்னால் சென்றதால் அதிர்ஷ்டவசமாக நூலிழையில் உயிர்தப்பினார். கடந்த மூன்று மாதங்களாக மின்வயர் தாழ்வாக இருப்பது குறித்துப் புகார் அளித்தும் மின்வாரிய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கிராம…