Polimer News
தீபாவளிக்காக சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் மக்கள் - முன்பதிவு எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடக்க வாய்ப்பு
தீபாவளி பண்டிகையைக் கொண்டாட சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்கள் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்ய முன்பதிவு செய்து வருகின்றனர். இதுவரை 85 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடக்க வாய்ப்புள்ளதாகப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. மதுரை, நெல்லை, திருச்சி, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு நீண்ட தூரப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும், பயணிகளின் முன்பதிவு எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்…