Hindu Tamil Thisai
செங்கோட்டை அருகே ரயிலில் அடிபட்டு புலி உயிரிழப்பு
தென்காசி: செங்கோட்டை அருகே ரயிலில் அடிபட்ட புலி உயிரிழந்தது. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து, தூத்துக்குடிக்கு செல்லும் பாலருவி எக்ஸ்பிரஸ் இன்று அதிகாலையில் பகவதிபுரம் - செங்கோட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே வந்துகொண்டு இருந்தது. அப்போது, அந்த வழியாக தண்டவாளத்தை கடக்க முயன்ற புலி ஒன்று ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது. அதைத் தொடர்ந்து, அந்த வழியாக வந்த மற்றொரு ரயிலின் ஓட்டுநர்…