Polimer News
எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீச்சு – கண்ணாடி உடைந்து லோகோ பைலட் காயம்!
சென்னை சென்ட்ரலில் இருந்து நேற்று திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் மீது மர்ம நபர் கல்வீசித் தாக்கியதில், முன்பக்கக் கண்ணாடி நொறுங்கிச் சிதறி லோகோ பைலட் காயமடைந்தார். ரயில் பெரம்பூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு, லோகோ பைலட் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். கல் வீச்சு தொடர்பாக புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த முகமது சபீர் என்பவரை ரயில்வே போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.