உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

சென்னை ஐ.ஐ.டி ஸ்டார்ட்-அப் அஸ்ட்ராயான் வரலாற்று சாதனை: ரூ.32,000 கோடி போர்க்கப்பல் ஒப்பந்தத்தைக் கைப்பற்றி அசத்தல்

இந்திய கடற்படையின் தற்காப்பு மற்றும் பாதுகாப்புத் துறையில் மேலும் ஒரு புதிய மைல்கல்லாக, சென்னை ஐ.ஐ.டி-யில் உருவாக்கப்பட்ட அஸ்ட்ராயான் (AstraYAN) எனும் டீப்-டெக் ஸ்டார்ட்-அப் நிறுவனம், ரூ.32,000 கோடி மதிப்பிலான 5 அடுத்த தலைமுறை போர்கப்பல்களின் செலுத்துதல் அமைப்பு ஒருங்கிணைப்பு (Propulsion System Integration - PSI) ஒப்பந்தத்தைக் கைப்பற்றி அசத்தியுள்ளது. கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் & இன்ஜினியர்ஸ் (GRSE) நிறுவனத்தால் நடத்தப்பட்ட இந்த சர்வதேச ஏலத்தில் (Tender), இத்தாலியின் ‘பின்காண்டியேரி’ (Fincantieri), ஸ்பெயினின் ‘நவாதியா’ (Navantia) மற்றும் ஜெர்மனியின் ‘ரென்க்’ (RENK) போன்ற முன்னணி உலகளாவிய பாத…