உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

ஆசிய விளையாட்டு போட்டிகள் - 2026

ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த நாடுகள் பங்கேற்கும் ஆசியப் போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இந்நிலையில் ஜப்பானின் ஐய்ச்சி- நகோயாவில் 20-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 4 வரை நடைபெற்றது. ஜப்பான் பேரரசர் நருஹிட்டோ போட்டிகளை தொடங்கி வைத்தார். அவருடன் பேரரசி, சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் கிரிஸ்டி கவென்ட்ரி ஆகியோரும் தொடக்க நிகழ்வில் பங்கேற்றனர் . பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் போட்டிகள் தொடங்கின. ஜப்பான் ஹாமர் த்ரோ பதக்க வீரர்களான தந்தை மகன் இணை ஷிக்நோபு முரோபுஷி- கோஜி முரோபுஷி ஆகியோர் விளையாட்டு ஜோதியை ஏந்திச் சென்றனர் . இந்திய அணி நட்சத்திர வீராங்கனை…