Indian Express Tamil
திருச்சி தனியார் பள்ளி மாணவன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி; மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
திருச்சி மாநகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவன் ஒருவர், பள்ளி கட்டிடத்தின் மேல் மாடியில் இருந்து திடீரென்று கீழே குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற மாணவன், திடீரென பள்ளி வளாகத்தின் மேல் மாடியிலிருந்து கீழே குதித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அந்த மாணவனை உடனடியாக மீட்டு, திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்; தற்போது அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் கண்டோன்ம…