Indian Express Tamil
செங்கோட்டை அருகே ரயில் மோதி புலி உயிரிழப்பு: பகவதிபுரம் - ஆரியங்காவு இடையே சோகம்
செங்கோட்டை அருகே பகவதிபுரம் - ஆரியங்காவு ரயில் நிலையங்களுக்கு இடையே புதன்கிழமை அதிகாலை தண்டவாளத்தைக் கடக்க முயன்ற புலி மீது பயணிகள் ரயில் மோதியதில், அது சம்பவ இடத்திலேயே பலியானது குறித்து வனத்துறை மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாநில எல்லைப் பகுதியான தமிழகப் பகுதியில், பகவதிபுரம் மற்றும் ஆரியங்காவு ரயில் நிலையங்களுக்கு இடையே புதன்கிழமை அதிகாலை சுமார் 1 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாலக்காட்டிலிருந்து தூத்துக்குடி நோக்கிச் சென்ற ‘பாலருவி எக்ஸ்பிரஸ்’ ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற புலி மீது மோதியதில், அது சம்பவ இடத்திலேயே பலியானது. தகவலறிந்து வந்…