Nakkheeran
“பள்ளிவாசலை அகற்றுவது எவ்வகையிலும் நியாயமற்றது” - ஜவாஹிருல்லா கடும் கண்டனம்!
தலைநகர் டெல்லியில் குதைமி பள்ளிவாசலை அகற்றும் ஒன்றிய அரசின் முயற்சி மதச்சார்பின்மையின் மீதான நேரடித் தாக்குதல் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லியில் கிருஷி பவன் வளாகத்தில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமையான குதைமி பள்ளிவாசலை அகற்றப்போவதாக ஒன்றிய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. மத்திய விஸ்டா மறுமேம்பாட்டுத் திட்டத்தின் பெயரால் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு வழிபாட்டுத் தலத்தை அகற்றத் துடிக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கை, மதச்சார்பின…