உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

“மாண்புமிகு அல்ல; மானமிகு என்பதுதான் மிக முக்கியமான ஒன்றாகும்” - மு.க. ஸ்டாலின் குறித்து கி. வீரமணி பேச்சு!

கோவையில் திராவிடர் கழகம் சார்பில், ‘பெரியார் அறிவுலகம் கண்ட திராவிட நாயகருக்கு நன்றி பாராட்டு விழா’ என்ற பெயரில் திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினுக்குப் பாராட்டு விழா இன்று (04.11.2026) நடைபெற்றது. இந்த விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பேசுகையில், “இந்தக் கோவை மாநகரத்தில் இப்படியொரு வரலாற்றுச் சாதனை நிகழ்ந்திருக்கிறது. காலத்தை வெல்லக்கூடிய வரலாற்றுச் சாதனையாக, 300 கோடி ரூபாய் திட்டத்தில் பெரியார் அறிவுலகம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. காலமெல்லாம் மாறும்; ஆனால், அறிவுலகம் என்றைக்கும் நிலைத்திருக்கும் என்று சொல்லக்கூடிய மகத்தான சாதனையைப் படைத்திருக்கிறார் நமது சகோ…