Polimer News
விளையாடச் சென்ற 7 வயதுச் சிறுவன் சடலமாக மீட்பு..!
மதுரை மாவட்டம் மேலூர் அருகே விடுமுறை நாளான நேற்று விளையாடச் சென்ற 7 வயதுச் சிறுவன், இன்று அதே பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. தனியாமங்கலத்தை சேர்ந்த பெரியகருப்பன் - சத்தியா தம்பதியின் 7 வயது மகனான முத்துச்செல்வம், நேற்று மாயமானான். 20க்கும் மேற்பட்ட போலீசார் சிறுவனைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வீட்டில் இருந்து சிறிதுதூரத்தில் உள்ள பாழடைந்த வீட்டில் இருந்து சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான். துவக்கத்தில் சிறுவனை நீர்நிலைகளில் மட்டுமே தீவிரமாக தேடியதால் பாழடைந்த வீட்டை கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. சிறுவன் உயிரிழப்புக்கான கார…