Indian Express Tamil
12 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை... தங்கைக்குத் திருமணம்; சஸ்பெண்ட் செய்யப்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் சொன்ன காரணங்கள்
எழுதியவர்: ஆனந்த் மோகன் ஜே திருமணம், குடும்பத்தில் ஏற்பட்ட மரணம், நீண்டகாலக் காத்திருப்புக்குப் பிறந்த குழந்தை, காய்ச்சல் எனப் பல்வேறு காரணங்களால் டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் பேரணியில் பங்கேற்க முடியவில்லை என்று மத்தியப் பிரதேச இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். பேரணியில் பங்கேற்காத 60 நிர்வாகிகளை இளைஞர் காங்கிரஸ் இடைநீக்கம் செய்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட நிர்வாகிகள் தங்களது விளக்கத்தைக் கேட்காமலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளனர். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, நவம்பர் 1ஆம் தேதி டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் இந்த…