Nakkheeran
"ஓட்டு போடாதவர்கள் பணத்தை திரும்ப கொடுங்கள்"; வேட்பாளரின் பேச்சால் அதிர்ச்சியில் உறைந்த மக்கள்
10% வட்டிக்கு கடன் வாங்கி பணம் கொடுத்தேன். ஆனால், எனக்கு வாக்களிக்கவில்லை. வாக்களிக்காதவர்கள் பணத்தை திருப்பி கொடுத்துவிடுங்கள் என்று சாபம் விட்டுள்ள வேட்பாளரின் பேச்சுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆந்திர பிரதேசத்தில், நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இந்த தேர்தலில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் சார்பில் பிரசாத் என்பவர் போட்டியிட்டார். சித்தூர் மாவட்டம், பலமனேரு நகராட்சியின் 32-வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட பிரசாத், தேர்தலுக்கு முன்பாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். இந்த தேர்தலில் நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்பதற்…