உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

தமிழகத்தை உலுக்கிய கவின் வழக்கு; தமிழக அரசு மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி!

தூத்துக்குடியைச் சேர்ந்த மென்பொறியாளர் கவின், மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்ததால் கடந்த ஆண்டு ஜூலை 27ஆம் தேதி (27.07.2025) ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கவினைக் கொலை செய்த சுர்ஜித், உதவி காவல் ஆய்வாளர்களாகப் பணிபுரிந்து வந்த அவரது தந்தை சரவணன், தாய் கிருஷ்ணகுமாரி உள்ளிட்டோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து, ஜூன் 9, 2026ல் கவின் கொலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘2016-2017ஆம் ஆண்டுகளில் கவினின் தாயை அழைத்து எச்சரித்ததாகவும், 2018-2019ஆம் ஆண்டுகளிலும் தொடர்ந்து சுர்ஜித்தின் தாயார் கிருஷ்ணகுமாரி எச்சரித்திருக்கின்றார். அது தவிர, கொலை…