Polimer News
சென்னை ஓபனில் சாதனை படைத்த தமிழக வீராங்கனை மாயா
சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றில் போலந்து வீராங்கனையை வீழ்த்தி, தமிழகத்தைச் சேர்ந்த மாயா ராஜேஸ்வரன் காலிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார். இதன் மூலம், சர்வதேச டென்னிஸ் தொடரில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு காலிறுதிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை என்ற பெருமையை மாயா பெற்றுள்ளார். இதற்கு முன்பு, கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற பட்டாயா ஓபன் டென்னிஸ் தொடரில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா காலிறுதியில் விளையாடியிருந்தார். சானியா மிர்சாவுக்குப் பிறகு சர்வதேச டென்னிஸ் தொடரில் இந்தச் சாதனையைப் படைத்துள்ள தமிழக வீராங்கனை மாயாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.