Indian Express Tamil
பெண் இன்ஸ்பெக்டருக்கு பாலியல் தொல்லை; ஆண் தலைமைக் காவலர் மீது 5 பிரிவுகளில் வழக்கு
நெல்லையில் பெண் தலைமைக் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமைக் காவலர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு முதல்வர் விஜய் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக, புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சென்றிருந்தார். முதல்வர் வருகைக்காக அங்கு காவல்துறையிர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். புதுக்கோட்டை மட்டும் இல்லாமல், வெளிமாவட்டங்களில் இருந்தும் காவலர்கள், பாதுகாப்பு பணிக்காக புதுக்கோட்டை வந்திருந்தனர். இந்த வரிசையில் நெல்லையில் இருந்து வந்த காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முதல்வரின் நிகழ்ச்சி முடிந்தவுடன், வெளிமாவட்டத்தில் இ…