IBC Tamil
நகல் காகிதங்கள் போர்வையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள்
சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட, சுமார் 792 மில்லியன் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் அடங்கிய கொள்கலன் ஒன்றை சுங்கத்தின் மத்திய புலனாய்வுப் பிரிவு கைப்பற்றியுள்ளது. இந்தியாவிலிருந்து நகல் காகிதங்கள் (photocopy paper) மற்றும் சாதாரண காகிதங்கள் எனக் குறிப்பிட்டு போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து இந்த மோசடி மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டுள்ளது. கந்தானைப் பகுதியில் அமைந்துள்ள போலி முகவரி மற்றும் ஆவணங்களைக் கொண்ட ஒரு நிறுவனத்திற்கு இந்தக் கொள்கலன் இறக்கு...