உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

அன்பில் மகேசுக்கு தீபாவளி வரை ஜாமீன் இல்லை

400 கோடி ரூபாய் லஞ்ச வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தாக்கல் செய்த மனு மீது வரும் 10ஆம் தேதி தீர்ப்பளிப்பதாக சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த 26ம் தேதி கைது செய்யப்பட்ட அன்பில் மகேஷ் 11 நாட்களாக சிறையில் உள்ள நிலையில், அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது விசாரணை நடைபெற்றது. அப்போது, அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் என கூறி பி.டி.அரசகுமார் தான் ரூ.100 கோடி வசூலித்ததாக புகார் உள்ளதாக அன்பில் மகேஷ் தரப்பில் வாதிடப்பட்டது. தாங்கள் வாங்கியதாக கூறப்படும் லஞ்சப்பணம் விலைவாசி ஏறுவது போல் ரூ.100 கோடி என ஆரம்பித்து தற்போது ரூ.800 கோடியாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவ…