Nakkheeran
சிவாவுக்கு புதுப் பட்டம் - ‘தமிழ் படம் 3’ பட அறிவிப்பு
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா நடிப்பில் 2010ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘தமிழ் படம்’. தமிழ் சினிமாவின் முதல் ஸ்பூப் படமாக இப்படம் அமைந்தது. இதன் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் ‘தமிழ் படம் 2’ என்ற பெயரில் 2018ஆம் ஆண்டு வெளியானது. இதுவும் ஓரளவு வரவேற்பை பெற்றது. தமிழில் வெளியான பல படங்களை ஒரு கதையில் கொண்டு வந்து நகைச்சுவை பாணியில் அனைவரும் ரசிக்கும்படி அமைந்துள்ள இந்த இரண்டு படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இதனால் இப்படத்தின் மூன்றாவது பாகம் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு அனைவரது ரசிகர்கள் மத்தியிலும் இருக்கிறது. அந்த எதிர்பார்ப்பு தற்போது பூர்த்தி ஆகியுள்ளத…