உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

தமிழகத்தில் 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்: பேரூராட்சிகள் துறை இயக்குநராக சராயு நியமனம்

தமிழகத்தில் நிர்வாக நலன் கருதி மூன்று மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பொதுத்துறை (ஸ்பெஷல்-ஏ) மூலமாக இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையராக பணியாற்றி வந்த டாக்டர் டி. ரவிச்சந்திரன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். நீண்ட விடுப்புக்குப் பிறகு மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ள கே.எம். சராயு, பேரூராட்சிகள் துறை இயக்குநராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார். மத்திய அரசுப் பணிக்குச் சென்றுள்ள டாக்டர் கே.பி. கார்த்திகேயனுக்கு பதிலாக இவர் இந்தப் பொறுப்பை ஏற்கிறார். இத…