IBC Tamil
கல்முனையில் வீடு தீக்கிரை: தீயணைப்புப் பிரிவின் தயார்நிலை குறித்து பொதுமக்கள் கேள்வி
கல்முனை, தைக்கா வீதியில் உள்ள வீடொன்றில் மின்சாரக் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, கல்முனை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவின் அவசரகாலச் செயற்பாடுகள் குறித்து அப்பகுதி மக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர். நேற்று (04) மாலை ஏற்பட்ட இந்த தீ விபத்தையடுத்து கல்முனை மாநகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்தன. எனினும், ஒரு வாகனத்திலிருந்து மற்றைய வாகனத்திற்கு நீர் நிரப்பும் நடவடிக்கை தாமதமாக இடம்பெற்ற பின்னரே தீயணைப்புப் பணிகள் தொடங்கப்பட்...